நம்ம ஸ்கூல் பவுண்டேசன்: அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள் நிதி

நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்துக்கு அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்களின் ஒரு மாத ஊதியம் முதல்வரிடம் வழங்கப்பட்டது. 
நம்ம ஸ்கூல் பவுண்டேசன்: அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள் நிதி
Published on
Updated on
1 min read

நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்துக்கு அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்களின் ஒரு மாத ஊதியம் முதல்வரிடம் வழங்கப்பட்டது. 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை தலைமைச் செயலகத்தில், பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” (நம்ம ஊர் பள்ளி) திட்டத்திற்கு அமைச்சர்கள் மற்றும் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது ஒருமாத ஊதியத் தொகையான ஒரு கோடியே 29 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் அரசு தலைமைக் கொறடா கோவி. செழியன் ஆகியோர் இன்று முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினர். 

முதல்வர், 19.12.2022 அன்று  “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” (நம்ம ஊர் பள்ளி) திட்டத்தைத் தொடங்கி வைத்து, அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட அரசுடன் மக்களும் கைகோர்க்க வேண்டும் என்றும், இதற்கு தேவையான நிதியை வழங்கிடக் கோரியும் கோரிக்கை விடுத்தார். முதல்வர் ஸ்டாலின் இவ்விழாவிலேயே ரூபாய் 5 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.

இந்தக் கோரிக்கைகயை ஏற்று, பல்வேறு அமைப்பினர் நிதி உதவி வழங்கி வருகின்றனர். சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒருமாத  ஊதியத்தினை “நம்ம
ஸ்கூல் பவுண்டேசன்” (நம்ம ஊர் பள்ளி) திட்டத்திற்காக வழங்கி வருகின்றனர். அந்த வகையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான ஈ.ஆர். ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.எச். ஜவாஹிருல்லா, சட்டப்பேரவை உறுப்பினர் பி. அப்துல் சமது ஆகியோரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கு.சின்னப்பா, எம். பூமிநாதன்,  டி.சதன் திருமலைகுமார், ஏ.ஆர்.ஆர். ரகுராமன் ஆகியோரும் தங்களது ஒருமாத ஊதியத்திற்கான காசோலைகளையும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கியுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com