சேலம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் குழந்தை வரம் வேண்டி ஆயிரக்கணக்கானோர் வழிபாடு!
சேலம் சாமிநாதபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் தை அமாவாசையை ஒட்டி சிறப்புப் பூஜைகள் இன்று நடைபெற்றது.


சேலம் சாமிநாதபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் தை அமாவாசையை ஒட்டி சிறப்புப் பூஜைகள் இன்று நடைபெற்றது. அம்மனுக்கு காய்கறிகள், சிறுதானியங்கள், கீரை வகைகளைச் சாதத்துடன் கலந்து கும்ப படையல் வைத்து பூஜை செய்யப்பட்டன.
இந்த படையலை வாங்கிச் செல்லும் பக்தர்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும், நாள்பட்ட வியாதிகள் இருப்பின் தீரும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. மேலும் அம்மனுக்குப் படைத்த அன்னத்தை சாப்பிட்டு வந்தால் நோய் நொடிகள் தீரும் என்றும் நம்பப்படுகிறது. அதிலும் அமாவாசை என்பதால் சிறப்புப் பலன் கிடைக்கும் என்று கருதி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கோயிலில் குவியத் தொடங்கினர்.
நீண்ட வரிசையில் காத்திருந்து குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டி வேண்டுதல், திருமண வரம் வேண்டி ஒரு ரூபாய் நாணயத்தை மஞ்சள் துணியில் சூலாயுதத்தில் கட்டியும் வேண்டுதல்களை செய்தனர்.
கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் கும்ப படையல் சாதத்தைப் பிரசாதமாக வழங்கப்பட்டது. சேலத்தில் கடந்த இரு மாதங்களாக அமாவாசை தினத்தன்று மாநிலத்தின் பல்வேறு பகுதியிலிருந்து குழந்தை வரம் வேண்டி ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கோயில் முன்பு திரண்டுவருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...