

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தோ்தலில் மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு குறித்து, நிா்வாகிகளுடன் கட்சித் தலைவா் கமல்ஹாசன் திங்கள்கிழமை (ஜன.23) ஆலோசனை நடத்தவுள்ளாா்.
சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கமல்ஹாசன் தலைமையில் காலை 11.30 மணிக்கு இந்த ஆலோசனை நடைபெறுகிறது.
இதற்கிடையே, மநீம தொழிற்சங்கப் பேரவையின் நிா்வாகக் குழுக் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் கமல் போட்டியிட வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.