விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஈரோடு இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியா? நிர்வாகிகள் ஆலோசனை

ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக தேமுதிக நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசனை நடத்தி வருகிறார்.

News image
பிரேமலதா விஜயகாந்த்
Updated On :23 ஜனவரி 2023, 5:31 am

DIN

ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக தேமுதிக நிர்வாகிகளுடன் தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஈரோடு கிழக்கு எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸின் திருமகன் ஈவிகேஎஸ் உயிரிழந்ததை தொடர்ந்து, பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக கூட்டணி தரப்பில் யார் போட்டியிடவுள்ளனர் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் பிரேமலதா ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனைக்கு பிறகு இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடுமா, பிற கட்சி வேட்பாளருக்கு ஆதரவளிக்குமா அல்லது யாருக்கும் ஆதரவு அளிக்காதா என்பது குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.