சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

அரசு நூலகத்தில் ஆயுள்கால உறுப்பினராக 900 மாணவர்கள்!

கிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 900 மாணவர்களும் கிள்ளை அரசு நூலகத்தில் ஆயுள்கால உறுப்பினராகச் சேர்க்கப்பட்டனர்.

News image
Updated On :26 ஜனவரி 2023, 7:25 am

DIN

கிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 900 மாணவர்களும் கிள்ளை அரசு நூலகத்தில் ஆயுள்கால உறுப்பினராகச் சேர்க்கப்பட்டனர்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே கிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் 74வது குடியரசு தினவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளியில் படிக்கும் 300 மாணவர்களுக்கு நூலக ஆயுள்கால கட்டணத்தை ஆர்.எஸ். டிரஸ்ட் சார்பிலும் 600 மாணவர்களுக்கு கிள்ளைரவிந்திரன் சார்பிலும் கட்டணம் செலுத்தப்பட்டது.

கிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 900 மாணவர்களும் கிள்ளை கிளை நூலகத்தில் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சிக்குப் பள்ளி தலைமையாசிரியர் பவானி தலைமை வகித்தார். பேரூராட்சிமன்ற தலைவர் மல்லிகா முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கு நூலக உறுப்பினர் அடையாளா அட்டையைப் பேரூராட்சி துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன் வழங்கி சிறப்புரையாற்றினார்.

Story image

மாவட்ட நூலகர் சங்கர், கிளை நூலகர்கள் பால் ஜோன், இரா.அருள், கணேஷ், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பாண்டியன், யாஸ்மின், மைதிலி, குமார், நிறைமதி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் மதுரச்செல்வி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.