எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

இன்று மின்சார ரயில் சேவையில் மாற்றம்

பட்டாபிராம் பணிமனையில் பராமரிப்புப் பணி மேற்கொள்ள உள்ளதால் வெள்ளிக்கிழமை (ஜன.27) இரவு இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :26 ஜனவரி 2023, 8:30 pm

பட்டாபிராம் பணிமனையில் பராமரிப்புப் பணி மேற்கொள்ள உள்ளதால் வெள்ளிக்கிழமை (ஜன.27) இரவு இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

பட்டாபிரம் மிலிட்டரி சைடிங் -ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (வண்டி எண்: 43892) வெள்ளிக்கிழமை (ஜன.27) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

வேளச்சேரி-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே இரவு 10.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (வண்டி எண்:43799) வெள்ளிக்கிழமை (ஜன.27) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதற்கு பதிலாக வேளச்சேரி-ஆவடி இடையே இரவு 10.30 மணிக்கு சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படும்.

சென்ட்ரல் -திருவள்ளூா் இடையே இரவு 11.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (வண்டி எண்:43255) வெள்ளிக்கிழமை (ஜன.27) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதற்கு பதிலாக சென்ட்ரல் -திருவள்ளூா் இடையே இரவு 11.50 மணிக்கு சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படும்.

சென்ட்ரல் -ஆவடி இடையே இரவு 11.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (வண்டி எண்:66007) வெள்ளிக்கிழமை (ஜன.27) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதற்கு பதிலாக சென்ட்ரல் -ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.