உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு!

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயப் பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை (ஜன.29)  தொடங்கியது.

கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்ட ஒரு குழுவினர்.

Published On :

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயப் பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை (ஜன.29)  தொடங்கியது.

கோடியக்கரை வன உயிரின சரணாலயப் பகுதிக்கு வடகிழக்குப் பருவ மழை காலத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து பறவைகள் வலசை வருவது வழக்கம். இங்குவரும் பூநாரைகள் உள்ளிட்ட அரியவகை பறவைகள் காண்பதசற்கு ஏராளமான பார்வையாளர்கள் இங்கு வருவர் 

இந்த சரணாலயத்தில் ஆண்டுதோறும் ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் வெளிநாடு, உள்நாட்டுப்  பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, கோடியக்கரை சரணாலயப் பகுதியில் காணப்படும் வெளிநாடு மற்றும் உள்நாட்டுப் பறவைகள் கணக்கெடுப்புப் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது.

முன்னதாக, கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுவோருக்கு சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.