தக்காளி போல... அதிகரித்துவரும் சின்ன வெங்காயம் விலை!

தமிழகத்தில் தக்காளி விலை அதிகரித்து வருவதைப்போன்று சின்ன வெங்காயத்தின் விலையும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.
தக்காளி போல... அதிகரித்துவரும் சின்ன வெங்காயம் விலை!

தமிழகத்தில் தக்காளி விலை அதிகரித்து வருவதைப்போன்று சின்ன வெங்காயத்தின் விலையும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. தற்போது சில்லறை வியாபாரத்தில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.95 வரை விற்பனை செய்யப்படுகிறது.

சின்ன வெங்காயம் விலை கடந்த சில நாள்களில் மேலும் உயர்ந்து, விரைவில் ஒரு கிலோ ரூ.100-ஐ தொடும் வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 

கரூர், திருப்பூர், தேனி, திருச்சி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து திண்டுக்கல் வெங்காய சந்தைக்கு விவசாயிகள் தங்கள் வெங்காயங்களை மொத்தமாகக் கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர். 

மேலும், மகாராஷ்டிரம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்தும் திண்டுக்கல் சந்தைக்கு வெங்காயம் வரத்து உள்ளது.

ஜூன் மாத தொடக்கம் முதலே சின்ன வெங்காயம் விலை அதிகரிக்கத் தொடங்கியது. ஜூன் தொடக்கத்தில் ரூ. 50ஆக இருந்த ஒருகிலோ சின்ன வெங்காயம் விலை, மொத்த விலையில் ரூ.80-ஆக உயர்ந்திருந்தது.

சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்ததால், விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது நாள்தோரும் 3 ஆயிரம் மூட்டைகள் மட்டுமே வருவதாகக் குறிப்பிடுகின்றனர்.

இதனால், தற்போது சின்ன வெங்காயம் விலை மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ. 95 வரை விற்பனை செய்யப்படுகிறது. இரண்டாவது தர சின்ன வெங்காயம் கிலோ ரூ.80 வரை விற்பனையாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com