சென்னையில் தக்காளி விலை மீண்டும் உயர்வு: கிலோ ரூ.120!

சென்னையின் பல்வேறு சந்தைகளில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி 20 ரூபாய் வரை உயர்ந்து ஒரு கிலோ ரூ.120க்கு மேல் விற்கப்படுகிறது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்னையின் பல்வேறு சந்தைகளில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி 20 ரூபாய் வரை உயர்ந்து ஒரு கிலோ ரூ.120க்கு மேல் விற்கப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த இரு நாள்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.50 - 80 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

சென்னை கோயம்பேடு சந்தைக்கு கிருஷ்ணகிரி, தருமபுரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலிருந்து அதிக அளவு தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களிலிருந்தும் தக்காளி வரத்து உள்ளது.

எனினும் முன்பை விட தற்போது தக்காளி வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோடை காலத்தில் மிகுந்த வெப்பம், திடீா் மழை, ஆகிய காரணங்களால் தக்காளிச் செடி பாதிப்படைந்ததாகவும், தக்காளியை உழவு செய்த விவசாயிகள் அதற்கு உரிய விலை கிடைக்கவில்லை என்பதால் இம்முறை சாகுபடி செய்யவில்லை என பல காரணங்கள் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு ரூ.50 - 80 வரை தக்காளி விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் 100 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. 

சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.120 வரை விற்பனையாவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

1,100 டன் தக்காளி வந்த நிலையில், தற்போது 400 டன் தக்காளி மட்டுமே வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com