மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

தமிழக - கேரள எல்லையில் 2 ஆவது நாளாக விவசாயிகள் போராட்டம்

குமுளி மலைச்சாலை அருகே தமிழக - கேரள எல்லை வனப்பகுதியில் 2 ஆவது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  

News image
தமிழக - கேரள எல்லையில் 2 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
Updated On :3 ஜூலை 2023, 3:07 am

DIN

குமுளி மலைச்சாலை அருகே தமிழக - கேரள எல்லை வனப்பகுதியில் 2 ஆவது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

தேனி மாவட்டம், தமிழக - கேரள எல்லையில் கூடலூர் நகராட்சிபகுதியில் உள்ளது அமராவதி, ஆசாரி பள்ளம் பகுதிகள். இங்கு விவசாயம் செய்து வந்த விவசாயிகளை வனத்துறையினர் கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியேற்றினர். 

70 ஆண்டுகாலமாக விவசாயம் செய்த எங்களை வெளியேற்றக் கூடாது என்று வன உரிமைக்குழு அமைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறிஞர் சுரேந்திரன் மூலம் வழக்கு தொடர்ந்து, விவசாயம் செய்யலாம் என இடைக்கால உத்தரவை பெற்றனர். 

அதன் பேரில் ஞாயிற்றுக்கிழமை வனப்பகுதிக்கு சென்ற 21 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் கொண்ட விவசாயிகள் அங்கு டெண்ட் அமைத்து தங்கினர். அவர்கள் அங்கு தங்கக்கூடாது என வனத்துறையினர் தடுத்தனர்.

நீதிமன்ற உத்தரவு உள்ளது எனக் கூறி இரவு அங்கு உணவு சமைத்து தங்கினர். இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் தங்கியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.