நெல்லை: குடிநீர் வழங்கக் கோரி மக்கள் சாலை மறியல்
திருநெல்வேலி நகரம் 23 வது வார்டில் சுத்தமான குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் திருநெல்வேலி- சேரன்மகாதேவி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.


திருநெல்வேலி நகரம் 23 வது வார்டில் சுத்தமான குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் திருநெல்வேலி- சேரன்மகாதேவி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி நகரம் 23 வது வார்டுக்கு உட்பட்ட பகத்சிங் தெரு, ஜெயப்பிரகாஷ் தெரு மாதா பூங்கொடி தெரு, முஹமது அலி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது.
இதையடுத்து அப்பகுதி மக்கள் திருநெல்வேலி நகரம் காட்சி மண்டபம் அருகே திருநெல்வேலி- சேரன்மகாதேவி சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...