பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கோவை: கல்லூரி சுற்றுச்சுவர் விழுந்து 4 பேர் பலி!

சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்த 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

News image
Updated On :4 ஜூலை 2023, 2:11 pm

DIN

கோவையில் தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

கோவையில் சுகுணாபுரம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியின் சுற்றுச் சுவர் இன்று (ஜூலை 4) திடீரென இடிந்து விழுந்தது. இதில் சிக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்த 2 பேர் படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த பகுதியில் காவல் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். காவல் துறையுடன் அப்பகுதி மக்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அதிக அளவு இடிபாடுகள் உள்ளதால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனத் தெரிகிறது. கட்டடப் பணியின்போது சுவர் இடிந்து விழுந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வடமாநிலத் தொழிலாளர்களும், ஆந்திர மாநிலத் தொழிலாளர்களும் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்ததால், உயிரிழந்தவர்கள் குறித்த விவரம் முழுமையாக இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.