பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

கடலூர் மாவட்டம், பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மேலிருப்பு கிராம மக்கள் முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டம் நடத்தினர்.
பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

கடலூர் மாவட்டம், பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மேலிருப்பு கிராம மக்கள் முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டம் நடத்தினர்.

மேலிருப்பு ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.தனபதி தலைமையில் நடந்த முற்றுகை போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, மேலிருப்பு கிராமத்தில் மயான பாதை மற்றும் நீர்வழி பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேற்படி ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ள தொண்டு நிறுவனத்திற்காக கட்டப்பட்ட தகர கொட்டகை ஆக்கிரமிப்பையும் அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.சங்கர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, பேசிய ஆர்.தனபதி ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு முறையும் தள்ளி வைத்து வருகின்றனர். தெருவில் தண்ணீர் தேங்குவதால் தொற்றுநோய் பரவும் சூழல் உள்ளது. மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகம் நெய்வேலி எம்எல்ஏ., சபா.ராஜேந்திரன், பண்ருட்டி ஒன்றியக்குழுத் தலைவர் சபா.பாலமுருகன் ஆகியோருக்கு கட்டுப்பட்டு நடக்கிறது எனப் புகார் தெரிவித்தார். 

பின்னர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.சங்கரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்டார் உதவி இயக்குநர் (ஊராட்சி) கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறினார். ஒரு வார காலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றப்படவில்லை என்றால் மீண்டும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.தனபதி தெரிவித்தார். இதனால் பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com