ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கடப்பாரையால் தாக்கி மனைவி கொலை! கணவரிடம் விசாரணை!

தஞ்சாவூரில் மனைவியை இன்று இரவு கடப்பாரையால் தாக்கிக் கொலை செய்த கணவரை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News image
கோப்புப் படம்
Updated On :5 ஜூலை 2023, 4:56 pm

DIN

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் மனைவியை கடப்பாரையால் தாக்கிக் கொலை செய்த கணவரை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் ஈஸ்வரி நகர் அருகேயுள்ள தனலட்சுமி நகரை சேர்ந்தவர் லாரன்ஸ் சேவியர். இவர் எல்ஐசி முகவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவி அல்போன்சா மற்றும்  மகள் சௌமியா ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில் லாரன்ஸ் சேவியர் தனது மனைவியின் பெயரில் உள்ள சொத்தை அவருக்கு தெரியாமல் விற்றுவிட்டார். இது குறித்து தகவல் தெரிய வந்ததையடுத்து அல்போன்சா தனது கணவர் லாரன்ஸ் சேவியரிடம்  கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த லாரன்ஸ் சேவியர் கடப்பாரையால் அல்போன்சாவின் தலையில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அல்போன்சா நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினர் லாரன்ஸ் சேவியரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.