புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா பங்கேற்றார்.
புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா பங்கேற்றார்.

புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்வு: ஒரே நேரத்தில் லட்சம் பேர் பங்கேற்பு!

புதுக்கோட்டை புத்தக திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்வில் ஒரு லட்சம் மாணவர்கள் இன்று பங்கேற்றனர்.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை புத்தக திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ‘புதுக்கோட்டை வாசிக்கிறது’ நிகழ்வில் ஒரு லட்சம் மாணவர்கள் இன்று பங்கேற்றனர்.

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து வரும் ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை 6-ஆவது புத்தகத் திருவிழா நடத்தவுள்ளனர்.

இதனை முன்னிட்டு ஒரே நேரத்தில் ஒரு லட்சம் பேர் பங்கேற்ற புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

முற்பகல் 11 மணிக்குத் தொடங்கி 12 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளின் மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் ஆங்காங்கே பங்கேற்றனர்.

புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா பங்கேற்றார்.

புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் கவிஞர் தங்கம் மூர்த்தி, அ. மணவாளன், ஆர். ராஜ்குமார், மா. வீரமுத்து, ஆதி திராவிடர் நல அலுவலர் கி. கருணாகரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

விராலிமலை

விராலிமலை அன்னவாசல் ஒன்றியம்
விராலிமலை அன்னவாசல் ஒன்றியம்

விராலிமலை தெப்பக்குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அன்னவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட 88 பஞ்சாயத்துக்களில் 100 நாள் வேலைத் திட்ட பணியாளர்கள், ஊராட்சி அமைப்பினர், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு ஆண்கள், பெண்கள் பள்ளி மற்றும் தனியார் கல்லூரியில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளோடு அமர்ந்து புத்தகம் வாசித்து மகிழ்ச்சியை ஏற்படுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com