
கோவை: கோவையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கோவை மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 5 அடியாக உயர்ந்துள்ளது.
சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்ந்திருப்பதால், இந்த ஆண்டில் கோவையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மகிழ்ச்சியான தகவலை தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை சிறுவாணி, கோவை குற்றாலம் ஆகிய பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அரை அடியாக இருந்த சிறுவாணி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதியில் இரு தினங்களாக பெய்த தொடர் கனமழை காரணமாக நீர்மட்டம் ஐந்து அடியாக உயர்ந்துள்ளது.
சிறுவாணி அணை பகுதியில் 122 மில்லி மீட்டர் மழை பதிவான நிலையில் அணையின் அடிவாரப் பகுதியில் 58 மில்லி மீட்டர் நீர் பதிவானது. இதன் காரணமாக 49 அடி கொண்ட நீர்மட்டம் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் 5 அடி உயர்ந்துள்ளது. இதனால் இப்போதைய நிலைக்கு தண்ணீர் தட்டுப்பாடு வாய்ப்பு குறைவு என குடிநீர் வடிகால் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.