ரயில் பெட்டியின் அடிபாகத்தில் சிக்கிய டயர்! எப்படி வந்தது?

தஞ்சாவூர் ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை காலை வந்த எர்ணாகுளம் விரைவு ரயில் பெட்டியின் அடிபாகத்தில் சிக்கியிருந்த டயரை ரயில்வே ஊழியர்கள் அகற்றினர்.
தஞ்சாவூர் ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை காலை வந்த எர்ணாகுளம் விரைவு ரயில் பெட்டியின் அடிபாகத்தில் சிக்கியிருந்த டயர்.
தஞ்சாவூர் ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை காலை வந்த எர்ணாகுளம் விரைவு ரயில் பெட்டியின் அடிபாகத்தில் சிக்கியிருந்த டயர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை காலை வந்த எர்ணாகுளம் விரைவு ரயில் பெட்டியின் அடிபாகத்தில் சிக்கியிருந்த டயரை ரயில்வே ஊழியர்கள் அகற்றினர்.

கேரள மாநிலம், எர்ணாகுளம் - காரைக்கால் இடையே விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில், வழக்கம்போல வியாழக்கிழமை இரவு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்ட விரைவு ரயில் கோவை, திருச்சி வழியாக தஞ்சாவூருக்கு வெள்ளிக்கிழமை காலை வந்தது. இதில் 500-க்கும் அதிகமான பயணிகள் இருந்தனர்.

அப்போது ஒரு முன்பதிவு பெட்டியின் அடிபாகத்தில் மோட்டார் சைக்கிள் டயர் சிக்கியிருந்தது. இதைப்பார்த்த ரயில்வே ஊழியர்கள் அடிபாகத்தில் சிக்கியிருந்த டயரை அகற்றி அப்புறப்படுத்தினர். இதன் பின்னர் ரயில் புறப்பட்டுச் சென்றது. இதனால் ரயில் புறப்படுவதில் தாமதம் ஏதும் ஏற்படவில்லை.

ரயில் பெட்டியின் அடிபாகத்தில் டயர் எப்படி சிக்கியது என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து இருப்புப்பாதை காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com