

கம்பம்: தேனி மாவட்டம் கூடலூரில் காதல் திருமணம் செய்து 3 மாதங்களே ஆன நிலையில் இளம்பெண் அரளி விதையை தின்று வெள்ளிக்கிழமை (ஜூலை 7) தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் பால்பாண்டியன் விசாரணை நடத்துகிறார்.
தேனிமாவட்டம் கூடலூர் மொட்டயத்தேவர் சந்தில் வசிப்பவர் தனுஷ் (23), இவருக்கும் கண்டமனூர் கணேசபுரத்தில் வசிக்கும் ஒப்பு மகள் திவ்யா (19) விற்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கடந்த 3 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக திவ்யா வெள்ளிக்கிழமை அரளி விதையை அரைத்து தின்று மயங்கி விழுந்தார். இதை பார்த்தவர்கள் திவ்யாவை கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த பணி மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
இதுபற்றி கூடலூர் வடக்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து உடற்கூறு பரிசோதனைக்கு ஒப்படைத்தனர். திருமணமாகி 3 மாதம் மட்டுமே ஆவதால் இளம்பெண் தற்கொலை பற்றி உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் பால்பாண்டியன் இரு குடும்பத்தாரிடம் விசாரணை நடத்த உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.