தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

திருப்பூர்: பாஜக சார்பில் நலத்திட்ட உதவிகள்!

திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் தூய்மைப்பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

News image

திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் தூய்மைப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்.

Updated On :2 பிப்ரவரி 2024, 5:18 pm IST

திருப்பூர்: திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் தூய்மைப்பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

ஜார்கண்ட் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்த 2 நாள்களுக்கு முன்பாக முதல்முறையாக திருப்பூரில் உள்ள தனது இல்லதுக்கு வருகை புரிந்தார்.

இதன் பின்னர் கோவை, சேலம், பெருந்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இதன் ஒரு பகுதியாக திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் தூய்மைப்பணிகள் உள்ளிட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருப்பூர் பாளையக்காடு பேருந்து நிறுத்தத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெற்றது.

Story image

இந்த நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட பாஜக தலைவர் பி.செந்தில்வேல் தலைமை வகித்தார். இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தூய்மைப்பணியாளர்கள் 100பேருக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் 6 வகையான காய்களை வழங்கினார்.

Story image

இதைத்தொடர்ந்து, 20 பெண்களுக்கு உஜ்வாலா திட்டத்தில் இலவச எரிவாயு உருளைகளையும், செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் 20 பெண்களுக்கான அஞ்சல் கணக்குகளையும் தொடங்கிவைத்தார்.

Story image

இந்த நிகழ்ச்சியில், பாஜக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர் கார்த்திக் செய்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.