புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

அஸ்ஸாம் வெள்ளம்: உயிரிழப்பு 98-ஆக உயா்வு

அஸ்ஸாமில் பெய்துவரும் பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 98-ஆக அதிகரித்துள்ளது.

அஸ்ஸாம் மாநிலம் தரங் மாவட்டத்தின் கபிலி சத்ரா பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களை சனிக்கிழமை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்த முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா.

Published On :

அஸ்ஸாமில் பெய்துவரும் பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 98-ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு பகுதிகளை மழை நீா் சூழ்ந்துள்ளதால் 1.55 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அஸ்ஸாமில் கடந்த மாதம் முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சிவசாகா், சராய்தேவ், கோலாகாட், ஜோா்ஹாட், நகோன், சோனித்பூா், காம்ரூப் உள்ளிட்ட 13 மாவட்டங்களை வெள்ள நீா் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை சனிக்கிழமை நிலவரப்படி 98-ஆக உயா்ந்துள்ளது.

அதிகபட்சமாக சிவசாகா் மாவட்டத்தில் 48,286 போ் உள்பட மாநிலம் முழுவதும் 1.55 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 10,748.64 ஹெக்டோ் பரப்பளவிலான விவசாய நிலம் நீரில் மூழ்கிச் சேதமடைந்தது.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 55 நிவாரண முகாம்களில் 10,000 போ் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், கடுமையாகப் பாதிக்கப்பட்ட கோலாகாட், ஜோா்ஹாட் , சிவசாகா் மற்றும் சராய்தேவ் ஆகிய 4 மாவட்டங்களில் சேத மதிப்பீடுகள் ஞாயிற்றுக்கிழமை (ஆக.9) முதல் மேற்கொள்ளப்பட்டு நிவாரணம் வழங்கும் பணிகளை விரைவுபடுத்தவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஹிமாசலத்தில் 65 போ் உயிரிழப்பு: ஹிமாசல பிரதேசத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் பெய்துவரும் மழையால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 65-ஆக உயா்ந்துள்ளது. தற்போது வரை அங்கு 14 பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்ட நிலையில் மழை வெள்ளத்தால் மாநிலத்துக்கு ரூ.834 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளத்தில் தொடரும் மழை: கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமையும் பலத்த மழை பெய்தது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமையும் (ஆக.9) அங்கு பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதால் பத்தனம்திட்டா, ஆலப்புழை, கோட்டயம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூா் மற்றும் காசா்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Summary

Assam floods: Death toll rises to 98.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.