மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தக்காளி விலை ரூ.10 குறைவு! கிலோ எவ்வளவு தெரியுமா?

சென்னை கோயம்பேட்டில் மொத்த கொள்முதல் விலையில் தக்காளி விலை ரூ.10 குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News image

கோப்புப் படம்

Updated On :8 ஜூலை 2023, 3:30 am


சென்னை கோயம்பேட்டில் மொத்த கொள்முதல் விலையில் தக்காளி விலை ரூ.10 குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் தக்காளி விலை 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

நாட்டின் ஒரு சில பகுதிகளில் கனமழை, கடந்த சில மாதங்களில் வெப்பம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தக்காளி வரத்து குறைந்துள்ளது. 

இதனால் நாடு முழுவதும் தக்காளி விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. பல பகுதிகளில் ஒரு கிலோ தக்காளி ரூ. 100-க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

நாட்டில் அதிகபட்சமாக உத்தரகண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி தாம் பகுதியில் ஒரு கிலோ தக்காளி ரூ. 250க்கு விற்பனை செய்யப்படுகிறது. உத்தரகாசியில் ரூ. 180 முதல் ரூ.200 வரை விற்பனையாகிறது. 

பல்வேறு நகரங்களில் தக்காளி விலை அதிகரித்துள்ள நிலையில், சென்னையில் ஒரு கிலோ தக்காளி சில்லறை விற்பனையில் ரூ. 100 முதல் 130 வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இன்றைய நிலவரப்படி கோயம்பேடு சந்தையில் மொத்தவிலை தக்காளி ரூ.10 குறைந்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.