ஆளுநர் மீது புகார்: குடியரசுத் தலைவருக்கு முதல்வர் கடிதம்

ஆளுநர் ஆர்.என்.ரவி மீது புகார் தெரிவித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆளுநர் ஆர்.என்.ரவி மீது புகார் தெரிவித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ஆளுநர் மீதான 22 பக்க புகார் கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பியுள்ளார். அதில், வகுப்புவாத வெறுப்பை தூண்டிவிட்டு மாநிலத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார் ஆளுநர். அமைச்சரவை நீக்குவது தொடர்பான ஆளுநரின் பரிந்துரை சட்டவிரோதமானது, அரசியலமைப்பை மீறி செய்லபட்டு வருகிறார்.

குற்றவாளிகள் மீது வழக்கு தொடர அனுமதி வழங்குவதில் ஆளுநர் தேவையற்ற தாமதம் செய்கிறார். சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் ரவி காலதாமதம் செய்கிறார் என்பன உள்ளிட்ட பல்வேறு புகார்களை ஆளுநர் மீது முதல்வர் ஸ்டாலின் முன்வைத்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவதாக முதல்வருக்கு ஆளுநர் கடிதம் எழுதினார். இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலையிட்டு, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்குரைஞரிடம் ஆலோசனை நடத்துமாறு ஆளுநருக்கு அறிவுரை வழங்கினார். இதையடுத்து தனது கடிதத்தை நிறுத்தி வைப்பதாக முதல்வருக்கு ஆளுநர் மீண்டும் கடிதம் எழுதினார். 

நேற்று, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஆளுநர் சந்தித்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

குடியரசுத் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தின் முழு விவரம் இங்கே

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com