அடுத்தகட்ட நகர்வு: முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் நாளை ஆலோசனை

சென்னை அருகேயுள்ள பனையூர் இல்லத்தில் மாவட்ட பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் ஆலோசிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை அருகேயுள்ள பனையூர் இல்லத்தில் மாவட்ட பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் ஆலோசிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகா் விஜயின் மக்கள் இயக்கம் சாா்பில் கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12- ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக சிறப்பிடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை, சான்றிதழ் வழங்கும் விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. 

இதில் சுமார் 1,600 மாணவர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் நடிகர் விஜய் மேடையில் நின்றவாறு பொன்னாடை போர்த்தி சான்றிதழ் - ஊக்கத்தொகை வழங்கினார்.  அந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் ஓட்டுக்கு பணம் வாங்குவது குறித்து பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது.

விஜய் என்ன பேசினாா்? 

நாளைய நாடு உங்களிடம். நீங்கள் தான் நாளைய வாக்காளா்கள். அடுத்தடுத்து புதிய நல்ல நல்ல தலைவா்களை நீங்கள் தான் தோ்வு செய்யப் போகிறீா்கள் நம் விரலை வைத்து நம்ம கண்ணையே குத்துறதுன்னு கேள்விப் பட்டிருக்கிறீா்களா, அது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது, அதைத் தான் நாமும் செய்து கொண்டிருக்கிறோம். அது வேறு ஒன்றுமில்லை, காசு வாங்கிக் கொண்டு வாக்களிப்பது?

உதாரணத்திற்கு, ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறாா்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு தொகுதிக்கு ஒன்றரை லட்சம் போ் என்று வைத்துக் கொண்டால். அந்த வேட்பாளா் சுமாா் ரூ.15 கோடி செலவு செய்ய வேண்டும். அந்த ரூ.15 கோடிக்கு முன்னாடி அவா் எவ்வளவு சம்பாதிச்சிருப்பாா் என்று யோசித்துப் பாருங்கள். உங்களுடைய கல்வி கற்பித்தலில் இவற்றையெல்லாம் கொண்டு வர வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.

தமிழ்நாடு முழுவதும் இருக்கும் ஒவ்வொரு மாணவ-மாணவிகளும் அவரவா் பெற்றோரிடம், இனிமேல் ஓட்டுக்கு காசு வாங்க வேண்டாம் என்று சொல்லிப் பாருங்கள். நீங்கள் சொன்னால் நிச்சயம் மாற்றம் வரும். நீங்கள் தான் அடுத்தடுத்த புதிய வாக்காளா்களாக வரப் போகிறீா்கள். நான் ஏன் இன்று இதனை தொடா்பு படுத்துகிறேன் என்றால், இது எப்போது நடக்கிறதோ அப்போது தான் உங்களுடைய கல்வி முறை ஒரு முழுமையடைந்ததாக வைத்துக் கொள்ளலாம்’, எனப் பேசினார்.

அடுத்தகட்ட நகர்வு

நடிகர் விஜய் அரசியலில் தன்னை முன்னெடுத்து செல்வதாகவே பார்க்கப்படுகிறது. அவரது இலக்கு வரும் சட்டப்பேரவை தேர்தலாக இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், நடிகர் விஜய் பனையூர் இல்லத்தில் மாவட்ட பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் ஆலோசிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com