ஆத்தூர் திரையரங்கு மேலாளருக்கு கொலை மிரட்டல்: பாஜக தலைவர் கைது!

ஆத்தூரில் போலிப் பத்திரம் தயாரித்து திரையரங்கு மேலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக அமைப்புசார மக்கள் சேவைப் பிரிவு மாவட்ட தலைவர் அருள் பிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆத்தூர் திரையரங்கு மேலாளருக்கு கொலை மிரட்டல்: பாஜக தலைவர் கைது!
Published on
Updated on
1 min read

சேலம்: ஆத்தூரில் போலிப் பத்திரம் தயாரித்து திரையரங்கு மேலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக அமைப்புசார மக்கள் சேவைப் பிரிவு மாவட்ட தலைவர் அருள் பிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் அருள் என்கிற அருள் பிரகாஷ். இவர் சமீபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
இவருக்கு அமைப்பு சாரா மக்கள் சேவை பிரிவு மாவட்ட தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆத்தூரில் உள்ள பிரபல திரையரங்கின் மேலாளரான அங்கமுத்துவை(60) தொடர்பு கொண்ட அருள் பிரகாஷ், கேசவன் தியேட்டர், ஸ்ரீதரன் பங்களா மற்றும் விஷ்ணு பிரியா திருமண மண்டபம் ஆகிய சொத்துகளுக்கான பத்திரம் தன்னிடம் உள்ளதாகவும், அனைத்து வாடகைகளையும் வசூல் செய்து தன்னிடம் தர வேண்டும் என்றும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அங்கமுத்து அளித்த புகாரின் அடிப்படையில், ஆத்தூர் நகர போலீசார் விசாரித்ததில், போலி பத்திரம் தயாரித்து மிரட்டல் விடுத்து பணம் பறிக்க முயன்றது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து, நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அருள் பிரகாஷ்யை கைது செய்து ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட கிளைச் சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com