திமுக அரசுக்கு நெருக்கடியா? எச்.ராஜா ட்வீட்

இன்னும் 48 மணிநேரத்தில் திமுகவின் ஆட்டம் முடிவுக்கு வரும் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா நேற்று இரவு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
திமுக அரசுக்கு நெருக்கடியா? எச்.ராஜா ட்வீட்

இன்னும் 48 மணிநேரத்தில் திமுகவின் ஆட்டம் முடிவுக்கு வரும் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா நேற்று இரவு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இதற்கிடையே, செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சரின் அறிவுரையை ஏற்று சிறிது நேரத்தில் உத்தரவை நிறுத்தி வைத்தார்.

இந்நிலையில், நேற்று இரவு 10.55 மணியளவில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்ட ட்விட்டர் பதிவு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் வெளியிட்ட பதிவில், “திமுகவின் ஆட்டம் இன்னமும் 48 மணி நேரம்தான். செந்தில் பாலாஜி இருக்கிறாரா? இருந்தால் காவிரி மருத்துவமனையில் தான் உள்ளாரா என்கின்ற பல சந்தேகங்கள் தீர்க்கப்படும் நேரம் நெருங்கிவிட்டது. தமிழக அரசின் கண்ணாமூச்சி ஆட்டம் முடிவுக்கு வரும். ஆட்டம் முடிவிற்கு வருமா அல்லது ஆட்சியேவா?” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, தில்லி பயணம் மேற்கொண்டிருந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடனான சந்திப்புக்கு பிறகு ‘ஒரு நோக்கத்துடான சந்திப்பு’ என்று பதிவிட்டிருந்தார்.

தொடர்ந்து மத்திய தலைமை வழக்கறிஞரிடம் செந்தில் பாலாஜி விவகாரம் குறித்து ஆலோசனை மேற்கொண்ட ஆளுநர் நேற்றிரவு தமிழகம் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக ஆளுநரின் தில்லி பயணமும், எச்.ராஜாவின் ட்வீட்டும் தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com