பொதுப்பணித்துறை தற்காலிக பணியாளர்கள் தற்கொலை மிரட்டல் போராட்டம்
புதுச்சேரியில் பொதுப்பணித்துறை தற்காலிக பணியாளர்கள் தற்கொலை மிரட்டல் போராட்டம் நடத்தி வருவதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


புதுச்சேரியில் பொதுப்பணித்துறை தற்காலிக பணியாளர்கள் தற்கொலை மிரட்டல் போராட்டம் நடத்தி வருவதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் கடந்த 2016ஆம் ஆண்டு பொதுப்பணித்துறையில் நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மீண்டும் தங்களுக்கு பணி வழங்கக்கோரி பல்வேறு கட்ட போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை காலை அவர்கள் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களில் பாரதி, பாபு உள்ளிட்ட மூன்று ஊழியர்கள் அலுவலக நுழைவுவாயில் மேற்பகுதியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.
பெரிய கடை போலீசார் விரைந்து வந்து அவர்களை சமரசம் செய்தனர். ஆனால் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடர்வதாக அவர்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...