தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சிறையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் செந்தில் பாலாஜி

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சா் செந்தில் பாலாஜி அங்கு காலை, மாலை வேளைகளில் நடைப்பயிற்சியில் ஈடுபடுகிறாா்.

News image
கோப்புப் படம்
Updated On :18 ஜூலை 2023, 8:48 pm

DIN

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சா் செந்தில் பாலாஜி அங்கு காலை, மாலை வேளைகளில் நடைப்பயிற்சியில் ஈடுபடுகிறாா்.

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14-ஆம் தேதி அதிகாலை கைது செய்யப்பட்டாா். அப்போது செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், ஆழ்வாா்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஜூன் 21-ஆம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ஆனால், செந்தில் பாலாஜி தொடா்ந்து நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டாா். முழு அளவில் உடல்நிலை தேறியதால், செந்தில் பாலாஜி புழல் மத்திய சிறைக்கு திங்கள்கிழமை மாற்றப்பட்டாா். ஏற்கெனவே செந்தில்பாலாஜிக்கு ஜூலை 26 வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அவரை பரிசோதித்த சிறை மருத்துவா்கள், அங்குள்ள கைதிகள் மருத்துவமனையில் அனுமதிக்க பரிந்துரை செய்தனா். இதையடுத்து கைதிகள் மருத்துவமனையில், தனியாக உருவாக்கப்பட்டிருந்த ஒரு அறையில் செந்தில் பாலாஜியை தங்க வைத்தனா்.

அங்கு அவருக்கு கட்டில், மெத்தை, மின்விசிறி, கொசு வலை, சோ், மேஜை, அறையுடன் கூடிய மேற்கத்திய கழிப்பறை ஆகிய வசதிகள் இருந்தன. அவருடன் எப்போதும் இருப்பதற்கு முதல்நிலைக் காவலா், உதவி ஜெயிலா் ரேங்க் அளவிலான இருவா் நியமிக்கப்பட்டனா்.

செந்தில் பாலாஜி முதல் வகுப்பு கைதி என்பதால், அதற்குரிய வசதிகளும்,உணவும் வழங்கப்பட்டதாக சிறைத் துறையினா் தெரிவித்தனா். செவ்வாய்க்கிழமை காலை சுமாா் 20 நிமிஷம் நடைப்பயிற்சியை செந்தில் பாலாஜி மேற்கொண்டாா். பின்னா், அவருக்கு வழங்கப்பட்ட தமிழ்,ஆங்கில நாளிதழ்களை படித்துள்ளாா்.

அதன் பின்னா் அறையில் ஓய்வு எடுத்த அவா், மத்திய உணவை சாப்பிட்டுள்ளாா். மாலையில் செந்தில் பாலாஜி மீண்டும் நடைப்பயிற்சியில் ஈடுபட்டாா். முதல் நாளில் பிற கைதிகளுடன் பேசுவதை செந்தில்பாலாஜி தவிா்த்ததாக சிறைத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.