தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

வள்ளியூரில் வழக்குரைஞருக்கு அரிவாள் வெட்டு: இருவர் கைது!

வள்ளியூரில் வழக்குரைஞரை அரிவாளால் வெட்டிய கூலிப்படையைச் சேர்ந்த இருவர் செய்யப்பட்டுள்ளனர்.

News image
Updated On :18 ஜூலை 2023, 11:41 am IST

வள்ளியூரில் வழக்குரைஞரை அரிவாளால் வெட்டிய கூலிப்படையைச் சேர்ந்த இருவர் செய்யப்பட்டுள்ளனர்.

வள்ளியூரில் வழக்குரைஞரை செவ்வாய்க்கிழமை காலை அரிவாளால் வெட்டிய கூலிப்படையைச் சேர்ந்த இருவரை வழக்குரைஞரும், பொதுமக்களும் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

வள்ளியூர் பாத்திமா கோயில் தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி ராஜ ஜெகன். இவர் வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணிசெய்து வருகிறார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலையில் தனது அலுவலகத்தை திறந்துகொண்டிருக்கும் போது பின்னால் வந்த இரண்டு மர்ம நபர்களில் ஒருவர் நீளமான கத்தியால் வழக்குரைஞர் ஜெகனின் தலையில்  வெட்டினாராம்.  

இதனை அடுத்து சுதாரித்துக்கொண்ட ஜெகன் அரிவாளால் வெட்டிய நபரை மடக்கி பிடித்துக் கொண்டாராம். இதனை அடுத்து அந்த பகுதியில் நின்றவர்களும் ஓடிவந்து அரிவாளோடு நின்றிருந்த மற்றொரு நபரையும் பிடித்து வள்ளியூர்  காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். 

இதனை ஆய்வாளர் ராஜூ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அரிவாளால் வெட்டிய பிரவின்ராஜ் மற்றும் கார்த்திக் இருவரும் மூன்றடைப்பு அருகே உள்ள பேரின்பபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய ஆனந்தராஜை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.