மதுவை கூடுதல் விலைக்கு விற்றால் சஸ்பெண்ட்!

மதுபானத்தை கூடுதலாக ரூ.10-க்கு விற்பனை செய்யும் கடை ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மதுவை கூடுதல் விலைக்கு விற்றால் சஸ்பெண்ட்!

மதுபானத்தை கூடுதலாக ரூ.10-க்கு விற்பனை செய்யும் கடை ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுவிலக்கு அமைச்சர் முத்துசாமி அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதலாக ரூ. 10 அல்லது அதற்கு மேல் மது விற்பனை செய்யும் கடை ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், கூடுதல் விலைக்கு விற்கும் கடை ஊழியர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com