நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

மத்திய நீர்வளத் துறை அமைச்சருடன் துரைமுருகன் சந்திப்பு!

மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து பேசினார்.

News image
Updated On :20 ஜூலை 2023, 6:52 am

DIN


புதுதில்லி: மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து பேசினார்.

தில்லில் வியாழக்கிழமை (ஜூலை 20) மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை  தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து  காவிரி நதிலியிலிருந்து தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய  தண்ணீரை உடனடியாக வழங்க வேண்டும் என்று முதல்வர் எழுதிய கடிதத்தை வழங்கினார்.

இதுகுறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் காவிரி நதியிலிருந்து தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை உடனடியாக வழங்க காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கு அறிவுரை வழங்கினார். 

மேலும், சமமான நீர் பங்கீடு செய்வதற்கும், பற்றாக்குறையான காலங்களில் சமமான நீர் பங்கீடுகளுக்கு தேவையான முறையை அமல்படுத்தவும் காவிரி நதிநீர் மேலாண்மை  ஆணையத்திற்க்கு அறிவுரைகளை வழங்கப்படும் என கூறினார்.

இந்நிகழ்வின் போது தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா உடன் இருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.