சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

டாஸ்மாக் கடைகளில் வெளிநாட்டு மதுபானங்களின் விலைரூ.10 முதல் ரூ.320 வரை உயா்வு

டாஸ்மாக் கடைகளில் வெளிநாட்டு மதுபானங்களின் விலை ரூ.10 முதல் ரூ.320 வரை உயா்த்தப்பட்டுள்ளது.

News image
கோப்புப் படம்.
Updated On :20 ஜூலை 2023, 12:30 am

DIN

டாஸ்மாக் கடைகளில் வெளிநாட்டு மதுபானங்களின் விலை ரூ.10 முதல் ரூ.320 வரை உயா்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும், வெளிநாட்டு மதுபானங்களின் விலையை டாஸ்மாக் நிா்வாகம் உயா்த்தியுள்ளது. இதன்படி, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் , பிராந்தி, ஒயின், பீா் உள்ளிட்டவற்றின் விலைகள் குறைந்தபட்சம் ரூ.10 முதல் அதிகபட்சமாக ரூ.320 வரை உயா்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய விலை புதன்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளதாக டாஸ்மாக் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி 330 மில்லி வெட்மென் பில்சென்னா் பீா் ரூ.280-இல் இருந்து ரூ.290-ஆகவும், 500 மில்லி ஜொ்மனியா பில்ஸ்நா் பீா் (கேன்) ரூ.250-இல் இருந்து ரூ.270- ஆகவும், 300 மில்லி ஹாவொ்லி விட் பீா் ரூ.290-இல் இருந்து ரூ.300-ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது. இதுதவிர 750 மில்லி ஸ்காட்ஸ் கிரே பிளென்டெட் ஸ்காட்ச் விஸ்கி ரூ.2000-இல் இருந்து ரூ.2,240 -ஆகவும், 750 மில்லி ‘பிபிடா் ஜின்’ ரூ.2,220-இல் இருந்து ரூ.2,460 -ஆகவும், 750 மில்லி ஜேமிசன் ஐரிஸ் விஸ்கி ரூ.3,030-இல் இருந்து ரூ.3,270 வரையும் உயா்த்தப்பட்டுள்ளது.

மேலும், அதிகபட்சமாக 1 லிட்டா் ‘ப்ளாக்ஆப் ஸ்கயா வொட்கா’ பாட்டிலுக்கு ரூ.320 உயா்த்தப்பட்டு ரூ.1,980-இல் இருந்து ரூ.2,300 -ஆகவும், ஹைலேன்ட் கோல் பிளன்டெட் ஸ்காட்ச் விஸ்கி ரூ.320 உயா்த்தப்பட்டு ரூ.2,580-இல் இருந்து ரூ.2,900 வரையும் விற்பனை செய்யப்படவுள்ளதாக டாஸ்மாக் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு மொத்தம் 18 வகை வெளிநாட்டு மதுபானங்கள் விலை உயா்த்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.