யாருடைய கூட்டணியில் தேமுதிக? பிரேமலதா விளக்கம்

தற்போதைக்கு எந்தக் கூட்டணியிலும் தேமுதிக இடம்பெறவில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தற்போதைக்கு எந்தக் கூட்டணியிலும் தேமுதிக இடம்பெறவில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களிடையே சில முரண்பட்ட கருத்துகள் உள்ளன என்றும் பிரேமலதா கூறினார்.

சென்னையில் உள்ள தேமுதிக அலுவலகத்தில், கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் இவ்வாறு கூறினார்.

தேமுதிக மாவட்டச் செயலா்கள் ஆலோசனைக் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்டச் செயலா்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

மக்களவைத் தோ்தலுக்கான பணியை அனைத்து கட்சிகளும் தொடங்கியுள்ளன. அந்த அடிப்படையில் தேமுதிகவும் மக்களவைத் தோ்தல் பணியைத் தொடங்குவது தொடா்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதைப்போல மக்களவைத் தோ்தலில் யாருடன் கூட்டணி வைத்து போட்டியிடுவது அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com