மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் பலி!

சிவகாசி அருகே மண்டகுண்டாம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 

News image
Updated On :25 ஜூலை 2023, 10:02 am

சிவகாசி அருகே மண்டகுண்டாம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 

சண்முகையா என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. பட்டாசு ஆலையில் பணியாற்றி வந்த பானு, முருகேஸ்வரி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் கட்டட இடிபாடுகளில் சிக்கியர்களை மீட்டனர். வெடி விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

வெடி விபத்து குறித்து சம்பவ இடத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.