திருப்பூரில் விவசாயிகள் தேங்காய் உடைக்கும் போராட்டம்: 3 எம்எல்ஏ.க்கள் பங்கேற்பு

விவசாயிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவகம் முன் செவ்வாய்க்கிழமை தேங்காய் உடைக்கும் போரட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 3 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.
திருப்பூரில் விவசாயிகள் தேங்காய் உடைக்கும் போராட்டம்: 3 எம்எல்ஏ.க்கள் பங்கேற்பு

அவிநாசி: கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவகம் முன் செவ்வாய்க்கிழமை தேங்காய் உடைக்கும் போரட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 3 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்க வேண்டும். கொப்பரை தேங்காய் கிலோ ரூ.150 வழங்க வேண்டும். கள் விற்க அனுமதிக்க வேண்டும். சத்துணவு திட்டத்தில் தேங்காய் பால், தேங்காய் எண்ணெய் சேர்க்க வேண்டும். நியாய விலைக் கடையில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும். பாமாயில் இறக்குமதியை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும், ஏற்கனவே அறிவித்தபடி, முதல்வர், கூட்டுறவுத் துறை அமைச்சர் ஆகியோருக்கு தபால் மூலம் தேங்காய் அனுப்பினர். இந்த போராட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே. என் விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), எம்.எஸ்.எம். ஆனந்தன் (பல்லடம்), கந்தசாமி (சூலூர்) உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 

சட்டப்பேரவை உறுப்பினர் எம்.எஸ்.எம். ஆனந்தன் பேசும்போது, தென்னை விவசாயிகளுக்கு ஆதரவாகவும், கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்கக் கோரியும் அதிமுக சார்பில் போராட்டம் நடத்துவதாக தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com