தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைப்பயணத்தில் தேமுதிக பங்கேற்கவிருப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று(ஜூலை 28) மாலை ராமேசுவரத்தில் தனது நடைப்பயணத்தைத் தொடங்குகிறார். ராமேசுவரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள மேடையிலிருந்தவாறு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கொடியசைத்து இந்த நடைபயணத்தைத் தொடக்கி வைக்கிறாா்.
இந்த நடைபயண தொடக்க நிகழ்ச்சிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | சிரிப்பால் வைரலான வேலம்மாள் பாட்டி காலமானார்: முதல்வர் இரங்கல்
இந்நிலையில் தேமுதிக இந்த நடைப்பயணத்தில் பங்கேறவிருக்கிறது. இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், 'பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ராமேசுவரத்தில் இருந்து இன்று நடைபயணம் தொடங்குகிறார். அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கோரினார். மாநில துணை செயலாளர் கரு. நாகராஜன் நேரடியாக வந்து அழைப்பிதழை வழங்கினார்.
மரியாதை நிமித்தமாக தேமுதிக சார்பில், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா மற்றும் கழகத்தினர், இந்த நடைபயண துவக்க விழாவில் கலந்துகொள்கிறார்கள். அவரது நடைபயணம் வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.
மக்களவைத் தோ்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து பின்னரே முடிவெடுக்கப்படும் என சில தினங்களுக்கு முன்பு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறிய நிலையில், தற்போது அண்ணாமலை நடைப்பயணத்தில் பங்கேற்பது பாஜக கூட்டணியில் தேமுதிக இருக்கலாம் என்று பேசப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


