கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

சிரிப்பால் வைரலான வேலம்மாள் பாட்டி காலமானார்: முதல்வர் இரங்கல்

கரோனா நிவாரணத் தொகை வழங்கப்பட்டபோது தனது சிரிப்பால் வைரலான வேலம்மாள் பாட்டி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :28 ஜூலை 2023, 11:56 am IST

கரோனா நிவாரணத் தொகை வழங்கப்பட்டபோது தனது சிரிப்பால் வைரலான வேலம்மாள் பாட்டி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் 2022ல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மளிகைப் பொருள்களுடன் ரூ. 2,000 கரோனா நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. 

அப்போது கன்னியாகுமரி மாவட்டம் கீழகலுங்கடி பகுதியைச் சேர்ந்த 90 வயது மூதாட்டி வேலம்மாளின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. கரோனா நிவாரணத் தொகையைப் பெற்றதும் பணத்துடன் பொக்கை வாய் சிரிப்பில் இருந்த அவரது புகைப்படம் பரவலாகப் பேசப்பட்டது. 

அதன்பின்னர் முதல்வர் மு.க. ஸ்டாலின் நாகர்கோவில் வந்தபோது வேலம்மாள் பாட்டியை சந்தித்துப் பேசினார். அப்போது தனக்கு ஒரு வீடு வேண்டும் என்று மூதாட்டி கேட்க, அதன்படி, அஞ்சுகிராமத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்குச் சொந்தமான குடியிருப்பில் அவருக்கு ஒரு வீடு ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேலம்மாள் பாட்டி நேற்று(வியாழக்கிழமை) இரவு காலமானார். 

அவரது மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர் தனது பதிவில், 'கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டி மறைந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன். கரோனா பேரிடர் கால நிவாரணமாகக் கழக அரசு வழங்கிய நிவாரணத் தொகையைப் பெற்றபோது, மக்களின் எண்ணங்களைப் பிரதிபலித்த அவரது புன்னகை வழியாக அவர் என்றும் நம்மிடையே நிலைத்திருப்பார். அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.