டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மணிப்பூரில் பெண்கள் பாலியல் வன்கொடுமை: கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை கண்டித்தும் மன்னார்குடியில் உள்ள பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
மணிப்பூரில் நடைபெறும் பாலியல் வன்கொடுமை, வன்முறை சம்பவங்களை கண்டித்து மன்னார்குடியில் கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பான் செக்கர்ஸ்  மகளிர் கல்லூரி மாணவிகள் .
Updated On :2 பிப்ரவரி 2024, 2:44 am

DIN

மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை கண்டித்தும் மன்னார்குடியில் உள்ள பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி மாணவிகள் சார்பில் வெள்ளிக்கிழமை, மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை கண்டித்தும் ,அதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் வீடுகள் பொது சொத்துக்கள் சூறையாட்டப்பட்டு வருவதுடன் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பை  உடனடியாக தடுக்க வலியுறுத்தியும், குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து அவர்களுக்கு பாரபட்சம் இல்லாமல் அதிகபட்ச தண்டனையை வழங்கிட வலியுறுத்தி மன்னார்குடி பாலகிருஷ்ணா நகரில் உள்ள கல்லூரி நுழைவாயில் அருகே, மாணவிகள் வழிக்காட்டும் ஒருங்கிணைப்பாளர் சுதா தலைமையில் மாணவிகள் கருப்பு உடை அணிந்து கண்டன வாசகங்கள் இடம்பெற்ற அட்டையை கையில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ,ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கி கண்டன கோஷங்கள் எழுப்பியவர்கள் பின்னர் அனைவரும் கலைந்து வகுப்பறைக்கு சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.