

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டியின் உடலுக்கு கூட்டுறவுத் துறையின் சார்பில் மலர்வலயம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு வழங்கிய கரோனா பேரிடர் கால நிவாரணத் தொகையினை பெற்றபோது, தனது புன்னகையின் வாயிலாக மக்களின் எண்ணங்களைப் பிரதிபலித்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததைத் தொடர்ந்து, கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் அறிவுறுத்தலின் பேரில், கூட்டுறவுத் துறையின் சார்பில் கன்னியாகுமரி மாவட்ட இணை பதிவாளர் சந்திரசேகரன் வெள்ளிக்கிழமை (ஜூலை 28) வேலம்மாள் பாட்டியின் உடலுக்கு மலர்வலயம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.