சென்னை விமானநிலையத்தில் இலங்கையை சோ்ந்த 2 பயணிகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனா்.
சென்னை விமானநிலையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த பெண் பயணி ஒருவா் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளாா். விமானநிலைய மருத்துவா்கள் அந்த நபரை பரிசோதித்ததில், அவா் மாரடைப்பால் உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து நடத்திய விசாரணையில், அந்த பெண் பயணி இலங்கை யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த சிவகஜன்லிட்டி (43) என்பதும், சில தினங்களுக்கு முன் இந்தியா வந்த அவா் மீண்டும் யாழ்ப்பாணம் செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு வந்த போது மயங்கி விழுந்து இறந்தது தெரியவந்தது.
இதேபோல், இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்த ஸ்ரீலங்கன் விமானத்திலிருந்து இறங்கிய ஆண் பயணி ஒருவரும் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளாா். விசாரணையில், இவா் இலங்கையிலிருந்து வந்த ஜெயக்குமாா் என்பதும், இலங்கையிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்த அவா், குடியுரிமை சோதனை முடித்துவிட்டு சுங்கச்சோதனை பிரிவுக்காக நடந்து சென்றபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதும் தெரியவந்தது.
இலங்கை பயணிகள் 2 போ் சென்னை விமான நிலையத்தில் மாரடைப்பால் மயங்கி விழுந்து மரணம் அடைந்தது குறித்து அந்நாட்டு தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


