பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழிச் சாலையில் லாரி மீது கார் மோதல்: 4 பேர் பலி

திருமங்கலம் -  விருதுநகர் நான்கு வழிச் சாலையில் கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலியாகினர். 

News image
Updated On :31 ஜூலை 2023, 7:51 am

திருமங்கலம் -  விருதுநகர் நான்கு வழிச் சாலையில் கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலியாகினர்.
மதுரை மாவட்டம், விரகனூர் ஊராட்சி நெடுங்குளத்தைச் சேர்ந்த செல்வகுமார் (34). கண்டைனர் லாரி ஓட்டுநரான இவர் மதுரையிலிருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு திருமங்கலம் -  விருதுநகர் நான்கு வழிச்சாலையில் கள்ளிக்குடி மையிட்டான்பட்டி விலக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது கன்னியாகுமரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் எதிர்பாரத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புச் சுவரை தாண்டி எதிரே வந்த கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. 

Story image

இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் செல்வகுமார் மற்றும் காரில் பயணம் செய்த குமரி மாவட்டம் மேக்காடு அருகே தெங்கன்குளிவிளையைச் சேர்ந்த சாம்டேவிட்சன், மார்ட்டின், கமலநேசன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழிச்சாலையில் நடைபெற்ற இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
தகவல் அறிந்து சென்ற கள்ளிக்குடி போலீசார் மற்றும் கள்ளிக்குடி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கிய வாகனங்களை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு மீட்டனர். தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இறந்தவர்கள் உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். 
திருமங்கலம் -  விருதுநகர் நான்கு வழிச் சாலையில் சாலை தடுப்பை தாண்டி கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.