பிரிஜ் பூஷணுக்கு எதிரான விசாரணை ஜூன் 15க்குள் முடிக்கப்படும்: அனுராக் தாக்குர்

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிரான விசாரணை ஜூன் 15க்குள் முடிக்கப்படும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் உறுதியளித்துள்ளார்.
பிரிஜ் பூஷணுக்கு எதிரான விசாரணை ஜூன் 15க்குள் முடிக்கப்படும்: அனுராக் தாக்குர்


பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிரான விசாரணை ஜூன் 15க்குள் முடிக்கப்படும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் உறுதியளித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் ஆகியோர், தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர் வீராங்கனைகளை நேரில் சந்தித்து இன்று (ஜூன் 7) பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அனுராக் தாக்குர், இந்திய மல்யுத்த வீரர்களுடன் 6 மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஜூன் 15ஆம் தேதிக்குள் பாலியல் புகார் தொடர்பான விவகாரத்தில் முடிவு காணப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பதவிக்கான தேர்தல் ஜூன் 30ஆம் தேதி நடத்தப்படும்.

மல்யுத்த வீரர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் திரும்பப்பெறப்பட்டுள்ளன. மூன்று முறை பொறுப்புவகித்துள்ள பிரிஜ் பூஷண் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மீண்டும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை வகிக்கக்கூடாது என மல்யுத்த வீரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஜூன் 15ஆம் தேதிக்கு முன்பு மல்யுத்த வீரர்கள் எவ்வித போராட்டத்திலும் ஈடுபடமாட்டார்கள் எனக் குறிப்பிட்டார்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சிங் மீதான பாலியல் புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தில்லி ஜந்தா் மந்தரில் ஒரு மாதமாக போராட்டம் நடத்திய மல்யுத்த வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகாட், வீரா் பஜ்ரங் புனியா உள்ளிட்டோரை மே 28-ஆம் தேதி போலீஸாா் கைது செய்து வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com