பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பட்டமளிப்பு விழா விவகாரம்: ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து ஜூன் 16ல் ஆர்ப்பாட்டம்

பட்டமளிப்பு விழாவை தாமதப்படுத்தும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து ஜூன் 16ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

News image
ஆர்.என். ரவி (கோப்புப் படம்)
Updated On :12 ஜூன் 2023, 7:54 am

DIN

பட்டமளிப்பு விழாவை தாமதப்படுத்தும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து ஜூன் 16ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
தமிழக பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாவுக்கு ஆளுநா் தேதி தராததால் மாணவா்கள் பாதிக்கப்படுவதாக உயா்கல்வித் துறை அமைச்சா் பொன்முடி கூறியிருந்தாா். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆளுநர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக, தமிழகத்தில் இதுவரை 7 பல்கலைக்கழகங்கள் மட்டுமே பட்டமளிப்பு விழா நடத்த அனுமதி கோரி இருந்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கமளித்துள்ளாா். 
இந்த நிலையில் பட்டமளிப்பு விழாவை தாமதப்படுத்தும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து ஜூன் 16ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக மாணவரணி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அமைப்புகள் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டுள்ளன. அதன்படி, சென்னையில் ஆளுநர் மாளிகை அருகே சின்னமலை சாலை சந்திப்பில் 16ஆம் தேதி காலை 9 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. 
மேலும் பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநதர் ஒப்புதல் தராததற்கும் கூட்டறிக்கையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.