மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சத்தீஸ்கரில் பெண் நக்சல் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கரின் கான்கேர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பெண் நக்சல் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

News image
Updated On :12 ஜூன் 2023, 9:19 am

சத்தீஸ்கரின் கான்கேர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பெண் நக்சல் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கான்கேர் மாவட்டத்தின் கோட்ரி நதியின் அமடோலா, பினகுண்டா, கல்பர் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் மற்றும் மாவட்ட ரிசர்வ் காவலர்கள் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், இன்று காலை 7 மணியளவில் பினாகுண்டா வனப்பகுதிக்கு அருகே நக்சல்கள் மறைந்திருந்து தாக்குதல் நடத்தினர். இதற்கு பாதுகாப்புப் படையினர் தக்க பதிலடி கொடுத்தனர். இதில் துப்பாக்கிச்சூட்டில் அடையாளம் தெரியாத பெண் நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். 

சம்பவ இடத்திலிருந்து 303 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பெண் நக்சலின் உடல் மீட்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்தில் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.