எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தில் சிறிய அளவில் மாற்றம்: அமைச்சர் செந்தில் பாலாஜி

வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தில் சிறிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

News image
Updated On :12 ஜூன் 2023, 6:44 am

DIN

வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தில் சிறிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் கடைகள் கட்டுதல் மற்றும் கூடுதல் அபிவிருத்தி பணிகளை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கிவைத்தார். இதைத்தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, கோவை மாநகராட்சி பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க முதல்வர் ரூ. 200 கோடி சிறப்பு நிதி ஒதுக்கினார். அந்த நிதியில் பல்வேறு சாலைகள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று ரூ.71 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. 

மாநகராட்சி சார்பில் 260 கோடி ரூபாய் செலவில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 578 கி.மீ. சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மின்கட்டண உயர்வை பொருத்தவரை அரசு தெளிவான விளக்கம் அளித்துள்ளது. வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை. விசைத்தறி, கைத்தறி, விவசாயத்திற்கான இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தில் சிறிய அளவிலான மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மின் கட்டணத்தில் மாற்றம் செய்துள்ளது. 

ஓபிஎஸ் தானும் இருக்கிறேன் என்பதைக் காட்ட அறிக்கை வெளியிட்டுள்ளார். ஒபிஎஸ் வீட்டில் மின்தடை‌ ஏற்பட்டதா?, அவரது தோட்டத்தில் ஏற்பட்டதா?. தமிழ்நாட்டில் எங்கும் மின் தடை இல்லை. சீராக மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அரசியலுக்காக அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மின்தடை என குற்றச்சாட்டுகளை சொல்கின்றனர். சென்னை விமான நிலையத்தில் அமித்ஷா வருகையின்போது ஏற்பட்ட மின்தடை தற்செயலாக நடந்த பழுது. அது உடனடியாக சரி செய்யப்பட்டு மின் விநியோகம் வழங்கப்பட்டது. பாமக தலைவர் அன்புமணி, மது விற்பனையில் 2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார். 

Story image

ஆண்டிற்கே 45 ஆயிரம் கோடிதான் மது விற்பனை நடக்கிறது.‌ எப்படி 2 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்?. புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி போன்றோர் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு சீட் வாங்க சில கருத்துக்கள், அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்கள். மக்கள் நலன் சார்ந்த குற்றச்சாட்டுகளை அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும். அரசியலுக்காக சொல்லப்படும் கருத்துகளை பொருட்படுத்த தேவையில்லை. வருமான வரித் துறை அதிகாரிகள் என் வீட்டிற்கு வரவில்லை. வருமான வரித் துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. அதிகாரிகள் கேட்ட ஆவணங்களை கொடுத்துள்ளனர். 

கூடுதல் ஆவணங்கள் கேட்டாலும் சமர்ப்பிக்க தயாராக உள்ளார்கள். சென்னை விமான நிலையத்தில் ஏற்பட்ட மின்தடை எதிர்பாராத வகையில் நடந்த நிகழ்வு. எதில் அரசியல் செய்ய வேண்டும் என்பதை மறந்து எதை வேண்டுமானாலும் அரசியல் செய்யலாம் என நினைப்பவர்களின் எண்ணம் திராவிட மண்ணில் எடுபடாது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.