மன்னார்குடியில் பிரசவத்தின்போது பெண் உயிரிழப்பு: நிவாரணம் கேட்டு கிராம மக்கள் மறியல்
மன்னார்குடியில் பிரசவத்தின்போது உயிரிழந்த பெண்ணுக்கு நிவாரணம் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.


மன்னார்குடியில் பிரசவத்தின்போது உயிரிழந்த பெண்ணுக்கு நிவாரணம் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த பரவாக்கோட்டை சாமிநாதன்தெருவைச் சேர்ந்த வீரமணி மனைவி ராணி (33). வீரமணி அதே பகுதியில் சலவை நிலையம் வைத்துள்ளார். தம்பதியருக்கு 4 வயதில் முத்தமிழ் என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் மீண்டும் ராணி கர்ப்பமடைந்திருந்தவருக்கு ஜூன் 5 ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. உடனே மன்னார்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு அன்று இரவு பெண் குழந்தை பிறந்தது. மறுநாள் ராணிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரிக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றனர். ஆனால் ராணியை அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து நிவாரணம் வழங்க வேண்டுமென ராணியின் சடலத்துடன் அவரது குடும்பத்தினர் மன்னார்குடி அரசு மருத்துவமனை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நிவாரணம் தருவதாக உறுதியளித்ததாக கூறப்பட்டதை அடுத்து ராணியின் சடலத்தை எடுத்துச் சென்று பாரவாக் கோட்டையில் இறுதிச்சடங்குகள் செய்து முடித்தனர்.
பிறந்த குழந்தை அரசு மருத்துவமனையில் சிசு சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அரசு மருத்துவமனை நிர்வாகம் கூறியப்படி நிவாரணத் தொகை வழங்குவதில் மெத்தனமாக இருந்ததால் இதுகுறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதையடுத்து உயிரிழந்த ராணியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மன்னார்குடிக்கு வந்து மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனை எதிரே பரவக்கோட்டை ஒன்றிய குழு உறுப்பினர்கள் உறுப்பினர்கள் கே. கோவில்வினோத், செல்வம் ஆகியோர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த மன்னார்குடி டிஎஸ்பி ஏ. அஸ்வந்த் ஆண்டோ, வட்டாட்சியர் என். கார்த்திக் ஆகியோர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் என.விஜயகுமார் உள்ளிட்ட மருத்துவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்கும் வரை மறியல் போராட்டம் நடைபெறும் என தெரிவித்துவிட்டு பரவக்கோட்டை பொதுமக்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...