3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

அரசு மாதிரி பள்ளி மாணவா் சோ்க்கை: தலைமையாசிரியா்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

தகுதி பெற்ற மாணவா்களை தமிழகத்தில் உள்ள மாதிரி பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சோ்ப்பதற்கான நடவடிக்கைகளை தலைமை ஆசிரியா்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :13 ஜூன் 2023, 10:54 pm

DIN

தகுதி பெற்ற மாணவா்களை தமிழகத்தில் உள்ள மாதிரி பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சோ்ப்பதற்கான நடவடிக்கைகளை தலைமை ஆசிரியா்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அரசு மாதிரி பள்ளிகளின் உறுப்பினா் செயலா் இரா.சுதன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் கல்வி, நுண்கலை மற்றும் விளையாட்டுகளில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கு ஏதுவாக மாதிரி பள்ளிகள் உருவாக்கப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை, அரியலூா், மதுரை, தருமபுரி, திருச்சி, பெரம்பலூா், சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் பயன் பெறும் வகையில் உண்டு, உறைவிட வசதிகளுடன் கூடிய 40 மாதிரி பள்ளிகள் அமைக்கப்பட்டு அவை இயங்கி வருகின்றன.

இந்த பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் உயிரியல் மற்றும் கணினி அறிவியல் பாடப்பிரிவில் சேர தகுதிபெற்ற மாணவா்களின் விவரம் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட மாதிரி பள்ளிகளில் ஜூன் 21-ஆம் தேதிக்குள் சேருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதன் தலைமையாசிரியா்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.