எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க ஆர்.எஸ்.பாரதிக்கு அனுமதி மறுப்பு!

அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :13 ஜூன் 2023, 11:11 am

DIN

அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

 கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக தற்போதய மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை  துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது எழுந்த புகாரையடுத்து வழக்கு பதிந்து விசாரணை நடைபெற்று வருகின்றது.

செந்தில் பாலாஜியின் உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் மே கடைசி வாரம் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், இன்று காலை முதல் செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினர்கள் வீட்டில் சோதனை நடைபெறுகிறது.

அதேபோல், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் அறையிலும் சோதனை நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், சென்னையில் உள்ள செந்தில் பாலாஜி இல்லத்துக்கு சென்ற ஆர்.எஸ்.பாரதிக்கு அவரை சந்திக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து செந்தில் பாலாஜி வீட்டுக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:

செந்தில் பாலாஜி ஒரு அமைச்சர். அவரது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அண்ணாமலை விவகாரத்தை திசை திருப்ப செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனைகளால் ஒரு மனிதரின் புகழை ஒன்றும் செய்ய முடியாது.

மத்திய அரசின் செயல் ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு அழகல்ல. தலைமைச் செயலகத்தில் இதற்கு முன்பு சோதனை நடந்தபோது கண்டித்தது திமுகதான் எனத் தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜி வீட்டுக்கு வெளியே நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் குவிந்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.