
கல்வித் துறை அதிகாரிகள் 5 பேரை பணியிட மாற்றம் செய்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தொடக்கக் கல்வி இயக்கக துணை இயக்குநர் (நிர்வாகம்) இரா.பூபதி பள்ளிக் கல்வி இயக்கக துணை இயக்குநராக(மின் ஆளுமை) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பள்ளிக் கல்வி இயக்கக இணை இயக்குநர் (நாட்டு நலப்பணித் திட்டம்) பணியிடத்திற்கு முழுக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலாளர் அ.ஞானகொளரிக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன துணை இயக்குநர்(நிர்வாகம்) பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குநராக பெ.அய்யண்ன் நியமிக்கப்பட்டுள்ளார். தொடக்கக் கல்வி இயக்கக துணை இயக்குநராக (நிர்வாகம்) ஜி.அருளரசு நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க: மணிப்பூரின் நிலைமை மன உளைச்சலை ஏற்படுத்துகிறது: பிரியங்கா
பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலாளராக ஜோ.அஞ்சலோ நியமிக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.