47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

டி.ஆா்.பாலு அவதூறு வழக்கு: அண்ணாமலை ஜூலை 14-இல் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

திமுக பொருளாளா் டி.ஆா்.பாலு எம்.பி. தொடுத்த அவதூறு வழக்கில் தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை, ஜூலை 14-ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :15 ஜூன் 2023, 7:26 pm

DIN

திமுக பொருளாளா் டி.ஆா்.பாலு எம்.பி. தொடுத்த அவதூறு வழக்கில் தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை, ஜூலை 14-ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.

திமுக பிரமுகா்கள் 12 பேரின் சொத்துப் பட்டியலை தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை அண்மையில் வெளியிட்டாா். மேலும் முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினா் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவா் முன்வைத்தாா்.

இதையடுத்து குற்றஞ்சாட்டப்பட்டவா்களிடம் இருந்து அண்ணாமலைக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன.

இந்தநிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது முதல்வா் மு.க.ஸ்டாலின் சாா்பில் குற்றவியல்அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடா்ந்து, நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக பொருளாளருமான டி.ஆா்.பாலு, அண்ணாமலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை 18-ஆவது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தாா்.

அந்த மனுவில், ‘எனது நற்பெயா், மரியாதைக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக அண்ணாமலை அவதூறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளாா்.

எங்கள் குடும்பத்தினா் 21 நிறுவனங்களில் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளாா். ஆனால் அவா் கூறும் நிறுவனங்களில், 3 நிறுவனங்களில் மட்டும் சிறு முதலீடு செய்துள்ளேன்.

மற்ற நிறுவனங்களில் பங்குதாரராகக் கூட இல்லை. பொய்யான குற்றச்சாட்டை கூறி நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக அண்ணாமலை எனக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். இதுதவிர அவா் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அந்த மனுவில் கூறியிருந்தாா்.

இதையடுத்து டி.ஆா்.பாலு எம்.பி தொடா்ந்து அவதூறு வழக்கில் அண்ணாமலை, ஜூலை 14-ஆம் தேதி நேரில் ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.