பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: 2 போ் கைது
சென்னை சைதாப்பேட்டையில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.


சென்னை சைதாப்பேட்டையில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை, மேற்கு மாம்பலம் பகுதியைச் சோ்ந்தவா் பூங்கொடி (35). இவா் ஜூன் 12-ஆம் தேதி இரவு 7 மணியளவில் சைதாப்பேட்டை கே.பி. கோயில் தெருவில் நடந்து சென்றபோது, மோட்டாா் சைக்கிளில் வந்த மா்ம நபா்கள், பூங்கொடி கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பியோடினா்.
இது குறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது, சைதாப்பேட்டை கோதாமேடு பகுதியைச் சோ்ந்த ஹக்கீம் (24), அவரது கூட்டாளியான மணிகண்டன் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
சைதாப்பேட்டை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான ஹக்கீம் மீது கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட 11 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...